• vilasalnews@gmail.com

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு.... மாஸ் காட்டிய தூத்துக்குடி!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில், 10 ஆம் வகுப்பு தேர்வில் 96.76 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதையடுத்து தூத்துக்குடி மாவட்டம் 3 ஆவது இடம் பெற்றுள்ளது.


தமிழ்நாடு முழுவதும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்குத் தேர்வு முடிவுகள் இன்று ( மே16 ) காலை 9 மணியளவில் வெளியானது.


மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் இந்த ஆண்டு தேர்வெழுதிய மொத்தப் பள்ளி மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 8,71,239. இதில், மாணவிகள்  4,35,119, மாணவர்கள் 4,36,120 ஆகும். இதில், தேர்ச்சி பெற்றவர்கள் 8,17,261 ( 95.03 % ).


இதில், மாணவிகள் 4.17,183 (95.88 % ) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 4,00,078 ( 91.74% ) தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம் போல மாணவர்களை விட 4.14 சதவீதம் மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 308  பள்ளிகளில், 10,347 மாணவர்கள், 11,112 மாணவிகள் என மொத்தம் 21,459 பேர் தேர்வெழுதினர். அவர்களில் 9,867 மாணவர்கள், 10,897 மாணவிகள் என மொத்தம் 20,764 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 


மாணவர்கள் 95.36 சதவீதமும், மாணவிகள் 98.07 சதவீதமும் என மொத்தத்தில் 96.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 


அதிக தேர்ச்சி சதவீதம் பெற்ற மாவட்டங்களில் மாநில அளவில் 96.76 சதவீதம் பெற்று தூத்துக்குடி மாவட்டம் 3 வது இடத்தையும், அரசு பள்ளி மாணவர்களில் அதிக தேர்ச்சி சதவீதம் பெற்ற மாவட்டங்களில் மாநில அளவில் 95.40 சதவீதம் பெற்று தூத்துக்குடி மாவட்டம் 5 வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளது.


தூத்துக்குடி மாவட்டத்தில் 308 பள்ளிகளில் 161 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியைக் கொடுத்துள்ளனர். 89 அரசு பள்ளிகளில் 35 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியைக் கொடுத்துள்ளனர்.

  • Share on

இரவோடு இரவாக சென்ற சண்முகையா எம்.எல்.ஏ!

ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ குறித்து அவதூறு... முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் மீது எஸ்பி அலுவலகத்தில் புகார்!

  • Share on