• vilasalnews@gmail.com

மாணவர்களுக்கு முக்கிய தகவல் சொன்ன தூத்துக்குடி கலெக்டர்!

  • Share on

மாணவர்களின் கலைத்திறனை வளர்க்கும் விதமாக மாவட்ட அரசு இசைப்பள்ளியில் வருகின்ற 05 ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை குரலிசை, பரதநாட்டியம், தற்காப்புக்கலை மற்றும் ஓவியம் போன்ற கலைகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


ஐந்து முதல் பதினாறு வயதுக்குட்பட்ட பள்ளி மாணாக்கர்களுக்கு கலைப்பயிற்சிகள் வழங்குதல், அவர்களின் கலைத்திறமைகளை வெளிக்கொணருதல், கலைக்கல்வி வழங்குதல் ஆகியவற்றை முக்கிய நோக்கமாகக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் ஜவகர் சிறுவர் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. 


திருநெல்வேலி மண்டலத்தின் கீழ் செயல்படும் தூத்துக்குடி மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றத்தில் குரலிசை, பரத நாட்டியம், தற்காப்புக்கலை மற்றும் ஓவியம் போன்ற கலைகளில் 6 வயது முதல் 16 வயது வரை உள்ள மாணாக்கர்களுக்கு வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் மாலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 


தற்போது, தூத்துக்குடி T.சவேரியார்புரம், தாளமுத்து நகர் காவல் நிலையம் எதிரில் அமைந்துள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளி வளாகத்தில் ஜவகர் சிறுவர் மன்றம் செயல்பட்டு வருகின்றது.


எனவே, மாணவர்கள் கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் மாணவர்களின் கலைத்திறனை வளர்க்கும் விதமாக மாவட்ட அரசு இசைப்பள்ளியில் வருகின்ற 05-05-2025 முதல் 24-05-2025 வரை காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை குரலிசை, பரதநாட்டியம், தற்காப்புக்கலை மற்றும் ஓவியம் போன்ற கலைகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. 


பயிற்சி முடிந்தவுடன் நிறைவு நாள் அன்று பயிற்சி பெற்ற மாணாக்கர்களுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாய்ப்பினை மாணாக்கர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு 9487739296 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

  • Share on

தூத்துக்குடியில் அதிர வைத்த மாட்டு இறைச்சி விவகாரம்... உணவு பாதுகாப்புத்துறை என்ன செய்தது?

ஓட்டப்பிடாரம் அருகே தண்டவாளத்தில் தலை வைத்து வாலிபர் தற்கொலை!

  • Share on