பத்திரிகை உலகில் வியக்கத்தக்க வகையில் பல்வேறு சாதனைகள் படைத்தவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். அவரது 12 வது நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடியில் அவரது திருஉருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செய்தனர்.
பத்திரிகைத்துறை - கல்வி - விளையாட்டுத்துறை - பொது நலம் சார்ந்த பல முன்னெடுப்புகளில் முக்கிய பங்களிப்புகளை அளித்த பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனார் 12 வது நினைவு நாளில் அவரது புகழை போற்றி வணங்கும் விதமாக,
அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆலோசனையின் பேரில், அதிமுக வர்த்தகஅணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த செல்லப்பாண்டியன் தலைமையில், தூத்துக்குடி வ. உ. சி.மார்க்கெட் அருகே அலங்கரித்து வைக்கப்பட்ட சிவந்தி ஆதித்தனாரின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில்,தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், பிடிஆர் ராஜகோபால், முன்னாள் மத்திய கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன்,
முன்னாள் மாவட்ட எம் ஜி ஆர் மற்ற துணை செயலாளர் சகாயராஜ், தூத்துக்குடி மாவட்ட முன்னாள் மீனவரணி இணைச் செயலாளர் ஜோசப், அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணைச் செயலாளர் ரயிவே மாரியப்பன், மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் நாகூர் பிச்சை, முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜா ராம், முன்னாள் நகர் மன்ற தலைவர் ரத்தினம், மத்திய வடக்கு பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் அசன், வட்ட செயலாளர்கள் லயன்ஸ் டவுன் சகாயராஜ், ஜெனோபர், மில்லை R.L ராஜா, அருண்குமார், அந்தோனி ராஜ், மாவட்ட பிரதிநிதி அசரியான்,
முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர், சிவ சுப்பிரமணியன், இயக்குனர்கள் அன்பு லிங்கம் பாலசுப்பிரமணியன், மீனவர் சங்க பிரதிநிதிகள், ஜேசுராஜ், பாலன், உப்பு தொழிலாளர் சங்கம் சிவசாமி, போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ், சங்கர், சண்முகராஜ், ராஜேந்திரன், பேச்சியப்பன், முருகன் சிறுபான்மை பிரிவு அனிஸ்டஸ், பிரபாகரன், அபு தாஹிர் மற்றும்சுண்ணாம்பு சந்தனம், ஸ்டாலின், அந்தோனி ராஜ், தணூஸ், பாபநாசம், அந்தோனி செல்வராஜ், ஆறுமுகம், சித்திரை வேல், சிவன் கோயில் இசக்கி முத்து, துறைமுகம் ராஜ்குமார், மகாராஜன், ஜான்சன், சுப்புராஜ், ஆபிரகாம், வெங்கடாசலம், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி நடராஜன், அரசு, ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



