• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது : ஆணையர் தகவல்!!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வருகிற 19ம் தேதி புதன்கிழமை குடிநீர் விநியோகம் இருக்காது என்று ஆணையர் மதுபாலன் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-


தூத்துக்குடி மாநகரின் குடிநீர் விநியோக பாதையான வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம், கலியாவூர் மற்றும் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பகுதிகளில் ‌வரும் மின்சார பாதையான கொம்பு காரநத்தம் துணை மின் நிலையத்தில் வருகின்ற 19.02.2025 புதன் கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அன்றைய தினம் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப் படுகிறது. ஆகவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையர் மதுபாலன், தெரிவித்துள்ளார்.

  • Share on

தூத்துக்குடியில் 56 வழித்தடங்களில் மினிபேருந்துக்களை இயக்க விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியா்!

தூத்துக்குடி அருகே முன்விரோதத்தில் ஒருவர் வெட்டி படுகொலை!!

  • Share on