• vilasalnews@gmail.com

புகார் கொடுத்து 3 மாதங்களுக்கு மேலும் நடவடிக்கை இல்லையா? எஸ்பியை நேரில் சந்திக்கலாம்!

  • Share on

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நாளை (08.01.2025) புதன்கிழமையன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.


தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் ஒவ்வொரு வாரமும்  புதன்கிழமைகளில் நடைபெறுவதை முன்னிட்டு நாளை (08.01.2025) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெறவுள்ளது என மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.


இக்கூட்டத்தில் காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட மனுக்களின் விசாரணையில் திருப்தி அடையாத புகார்தாரர்கள் மற்றும் காவல் நிலையங்களில் மூன்று மாதங்களுக்கு மேல் நடவடிக்கை இல்லாத புகார்கள் குறித்து பொதுமக்கள் நேரில் ஆஜராகி தங்களின் கருத்துக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவிக்கலாம் என்பதனை மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுவதாக, மாவட்ட காவல்துறை சார்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share on

தூத்துக்குடி பெண்களே ரெடியா? பெண்கள் மட்டும் கலந்து கொள்ளும் பொங்கல் விழா கொண்டாட்டம்!

தூத்துக்குடிக்கு பொங்கல் சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!

  • Share on