• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் தமிழக வெற்றிக்கழகத்தினர் கைது!

  • Share on

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளார் புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற தமிழக வெற்றிக் கழகத்தினரை போலீசார் கைது செய்தனர். 


தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, அண்ணா பல்கலைக்கழக விவகாரம், பெஞ்சல் புயலுக்கு நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தவெக தலைவர் விஜய், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து மனு கொடுத்தார். அவருடன் புஸ்ஸி ஆனந்தும் சென்றிருந்தார். இந்த நிலையில் இந்த நிகழ்வுக்கு பிறகு விஜய் , அவருடைய வீட்டுக்கு சென்றதும், நேராக அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமையை கண்டித்து விஜய் தன் கைப்பட எழுதிய கடிதத்தை தடையை மீறி விநியோகம் செய்ததால் கைது செய்யப்பட்ட பெண் நிர்வாகிகளை சந்திக்க சென்ற கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தையும் போலீஸார் திநகரில் வைத்து கைது செய்தனர்.


தமிழக காவல்துறையின் இந்த கைது செயலை இதனைக் கண்டித்தது தூத்துக்குடியில் தென்பாகம் காவல் நிலையம் அருகே ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பாலா தலைமையில் தமிழக வெற்றிக்கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். அவர்களை தென்பாகம் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 


அதே போல், தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் பலர் கலந்து காெண்டு திமுக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து காெண்டவர்களை மத்தியபாகம் போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர். 

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 18 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்!

கோவில்பட்டியில் கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ கைது!

  • Share on