தமிழக முழுவதும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் திமுக அரசின் மக்கள் விரோத செயல்களை எடுத்துரைக்கும் விதமாக, பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களை அதிமுகவினர் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், தூத்துக்குடி வடக்கு மாவட்டம், எட்டையபுரத்தில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ அறிவுறுத்தலின் பேரில், எட்டையபுரம் அதிமுக நகரச் செயலாளர் ராஜகுமார் தலைமையில் அதிமுகவினர் கள்ளச்சாராயம் மரணங்கள், போதைப் பொருட்கள் கடத்தல், முதல்வர் ஸ்டாலின் பதவி விலக கோருதல் போன்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை எட்டையபுரத்தில் உள்ள கடை வீதிகள், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கினர்.

இதில் எட்டையபுரம் பகுதியைச் சேர்ந்த அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.




