• vilasalnews@gmail.com

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 பொங்கல் பரிசு!

  • Share on

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்பு மட்டும்தானா?, ரொக்கப் பணம் கிடையாதா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்த நிலையில் ரூ.3000 ரொக்க பணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கப் பணம் வழங்கப்பட்டது.


அதன்பிறகு, சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த திமுக, 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப் பணத்தை வழங்கியது. ஆனால், கடந்த ஆண்டு (2025) பொங்கல் பரிசு தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. ரொக்கப் பணம் எதுவும் வழங்கப்படவில்லை.


இந்த நிலையில், தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப் பணமும் வழங்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தார்கள்.


இந்த நிலையில், 2026 பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு ரூ.248 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு கொள்முதல் செய்வதற்காக இந்த தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை தகவல் தெரிவித்தது.

இந்த அறிவிப்பை கேட்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்பு மட்டும்தானா? ரொக்கப் பணம் கிடையாதா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்தது.


இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் எவ்வளவு ரொக்க பணம் வழங்குவது என்பது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில் ரூ.3 ஆயிரம் ரொக்க பணம் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முறையான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.


அதன்டி, ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு உடன் ரூ.3000 ரொக்கமாக பொங்கல் பரிசு தொப்பு வழங்கப்பட உள்ளது. மேலும் பொங்கலுக்கான வேஷ்டி சேலைகள் வழங்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

  • Share on

தென்மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

பொங்கல் திருநாள் - பள்ளிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை!

  • Share on