• vilasalnews@gmail.com

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் மு.க.ஸ்டாலின் பிரதமராவார் - இப்படி சொல்வது யார் தெரியுமா?

  • Share on

மத்தியில் "இந்தியா" கூட்டணி ஆட்சி அமைத்தால் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிரதமராக பதவி வகிப்பார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய நாட்டின் மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் 2 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. ஜூன் 1-ம் தேதி வரை எஞ்சிய 5 கட்ட தேர்தல்கள் நடைபெறும். ஜூன் 4-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றியை அறுவடை செய்யும் முனைப்பில் இருக்கிறது. பாஜக கூட்டணியின் வெற்றியைத் தடுக்க "இந்தியா" கூட்டணி போராடிக் கொண்டிருக்கிறது. பாஜக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மோடியே முன்னிறுத்தப்பட்டுள்ளார். ஆனால் "இந்தியா" கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என அறிவிக்கப்படாததை சுட்டிக்காட்டி பாஜக தலைவர்கள் விமர்சித்தனர். 

இதற்கு பதிலடி தந்த "இந்தியா" கூட்டணி தலைவர்கள், யார் பிரதமர் என்பதை நாங்கள் முடிவு செய்து கொள்கிறோம். ஒரு ஆண்டுக்கு ஒரு பிரதமர் என்கிற பார்முலாவைக் கூட நாங்கள் செயல்படுத்துவோம் என்றனர்.


இதனைத்தொடர்ந்து, "இந்தியா" கூட்டணியின் ஓராண்டுக்கு ஒரு முதல்வர் என்ற பார்முலாவை விமர்சித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது : 

30 ஆண்டுகளாக நாட்டின் நிலையான ஆட்சிகள் அமையவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் வலிமையான தலைவரான மோடி தலைமையில் நிலையான ஆட்சி நடைபெற்று வருகிறது. அரசியலில் மட்டுமல்ல அரசின் கொள்கைகள், வளர்ச்சித் திட்டங்களிலும் நிலைத்த தன்மை நிலவுகிறது.

தற்போது "இந்தியா" கூட்டணியின் தலைவர்கள் ஒரு ஆண்டுக்கு ஒரு பிரதமர் என பேசி வருகின்றனர். அதாவது ஒரு ஆண்டுக்கு சரத்பவார் பிரதமராக இருப்பாராம்; இன்னொரு ஆண்டுக்கு மம்தா பானர்ஜி பிரதமராக பதவி வகிப்பாராம்; அடுத்த ஒரு ஆண்டுக்கு மு.க.ஸ்டாலின் பிரதமராவாராம். அப்புறமாக ராகுல் காந்தியை பிரதமராக்குவார்களாம். ஒரு நாடு எப்படி செயல்படக் கூடாது என்பதற்கு இதுதான் உதாரணம் என்றார் அமித்ஷா.

  • Share on

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது!

கட்டுப்பாட்டை இழந்து தடுமாறிய ஹெலிகாப்டர் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் அமித்ஷா!

  • Share on