• vilasalnews@gmail.com

2024 நாடாளுமன்றத் தேர்தல் தேதி இதுவா? தமிழகத்தில் எப்பொழுது?

  • Share on

வரும் ஏப்ரல் 16ஆம் தேதி முதல் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தொடங்கி மே மாதத்திற்குள் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி முடிப்பதை இந்தியத் தேர்தல் ஆணையம் வழக்கமாக கொண்டுள்ளது.

தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த பணிகளை கடந்த 2 மாதங்களாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

2024 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் வாய்ப்பு உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் பணிகள் விரைவாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழ்நாட்டை பொறுத்தவரை இறுதி வாக்காளர் பட்டியலை நேற்றைய தினம் (22-01-2023) அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் தமிழ்நாட்டில் 6 கோடியே 18 லட்சத்து 90 ஆயிரத்து 348 வாக்காளர்கள் வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி உள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 6 லட்சத்து 60 ஆயிரத்து 419 வாக்காளர்கள் உள்ளனர்.

தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்குட்பட்ட கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 140 பேர் ஆவர்.

தமிழ்நாட்டின் வாக்காளர் புள்ளிவிவரங்கள்:

தமிழ்நாட்டில் 6 கோடியே 18 லட்சத்து 90 ஆயிரத்து 348 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3 கோடியே 03 லட்சத்து 96 ஆயிரத்து 330 ஆண் வாக்காளர்களும், 3 கோடியே 14 லட்சத்து 85 ஆயிரத்து 724 பெண் வாக்காளர்களும், 8,294 மூன்றாம் பாலினத்தவரும் அடங்குவர்.

தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி உள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 6 லட்சத்து 60 ஆயிரத்து 419 வாக்காளர்கள் உள்ளனர்.

தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்குட்பட்ட கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 140 பேர் ஆவர்.

  • Share on

தொன்மைச் சிறப்பு வாய்ந்த தமிழ் இனப்பெருங்குடிகளின் பேராதரவுடன் 4 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்!

விபத்தில் சிக்கினார் மம்தா பானர்ஜி.. மேற்கு வங்க முதலமைச்சருக்கு என்னாச்சு? விபத்து நடந்தது எப்படி?

  • Share on