தூத்துக்குடிக்கு வருகை தந்த அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பாண்மையான இடங்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைத்து தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார்.

அதனைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவையில் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் கீதாஜீவன் சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சராகவும், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றனர்.

இந்நிலையில் இன்று தூத்துக்குடி வந்த அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.