தூத்துக்குடி மாவட்ட புதிய கலெக்டர் விஷு மகாஜன் யார்? முழு விபரம்!
நிருபர்
April 02, 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய கலெக்டர் விஷு மகாஜன் யார்? முழு விபரம்!

தமிழ்நாட்டை அடுத்து ஆளப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் மாற்றப்பட்டு, புதிய கலெக்டராக விஷு மகாஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

1990 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி பிறந்த விஷு மகாஜன், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் தலைநகரான சண்டிகர் இவரது பூர்வீகம். பிறந்தது பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா. சண்டிகரில் 1 முதல் 7 வது வகுப்பு வரை தனியார் பள்ளியிலும், உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள மிலிட்டரி பள்ளியில் 8 முதல் 10 வது வகுப்பு வரையிலும், சண்டிகரில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்து விட்டு, ஐஐடி பாம்பேயில் கணினி அறிவியலில் பொறியியல் பட்டம் பெற்றார்.

2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார். ஈரோட்டில் பயிற்சி ஐஏஎஸ் ஆக தனது பணியை தொடங்கி, அதன் பின் சுமார் 2 ஆண்டுகள் சிதம்பரத்தில் சப் கலெக்டராக பணியாற்றினார். தொடர்ந்து மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இணை மேலாண் இயக்குநராகவும் (நிதி) பணியாற்றினார் என்பது குறிப்பிடதக்கது.