தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 2 மாவட்ட ஆட்சியர்கள், 2 காவல் ஆணையர்கள் மற்றும் ஒரு ஐஜி உள்ளிட்டோர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேபோல் 2 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் 2 காவல் ஆணையர்கள் மற்றும் ஒரு ஐஜி ஆகியோரையும் மாற்றி இருக்கிறது. அதன்படி கோவை மேற்கு மண்டல ஐஜியாக ரம்யா பாரதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த பிருந்தா தேவி மாற்றப்பட்டு அருண் தம்புராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் தூத்துக்குடி ஆட்சியராக இருந்த இளம் பகவத் மாற்றப்பட்டு, விஷ்ணு மஹாஜன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் தாம்பரம் காவல் ஆணையராக இருந்த அமல்ராஜ் மாற்றப்பட்டு சஞ்சய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை காவல் ஆணையராக இருந்த லோகநாதன் மாற்றப்பட்டு அபிஷேக் தீக்‌ஷித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் சூழலில், தேர்தல் ஆணையம் அடுத்தடுத்து காவல் ஆணையர்களை மாற்றி வருகிறது. தேர்தல் நெருங்கும் போது இது இன்னும் அதிகரிக்கும் என்று பார்க்கப்படுகிறது.