தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியராக விஷு மகாஜன் இன்று ( 03.04.2026 ) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மாற்றப்பட்டு, புதிய ஆட்சியராக விஷு மகாஜன் நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியராக விஷு மகாஜன் இன்று ( 03.04.2026 ) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

1990 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி பிறந்த விஷு மகாஜன், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் தலைநகரான சண்டிகர் இவரது பூர்வீகம். பிறந்தது பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா. சண்டிகரில் 1 முதல் 7 வது வகுப்பு வரை தனியார் பள்ளியிலும், உத்தரகாண்ட்  மாநிலம் டேராடூனில் உள்ள மிலிட்டரி பள்ளியில் 8 முதல் 10 வது வகுப்பு வரையிலும், சண்டிகரில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்து விட்டு, ஐஐடி பாம்பேயில் கணினி அறிவியலில் பொறியியல் பட்டம் பெற்றார்.

2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார். ஈரோட்டில் பயிற்சி ஐஏஎஸ் ஆக தனது பணியை தொடங்கி, அதன் பின் சுமார் 2 ஆண்டுகள் சிதம்பரத்தில் சப் கலெக்டராக பணியாற்றினார். தொடர்ந்து மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இணை மேலாண் இயக்குநராகவும் (நிதி) பணியாற்றினார் என்பது குறிப்பிடதக்கது.