இந்திய விடுதலைக்கு முதல் முழக்கமிட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் விழாவை  முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள அவரது நினைவு கோட்டையில் தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க பாஞ்சாலங்குறிச்சி அமைந்துள்ளது. இங்குள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டையில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையன்று கட்டபொம்மனின் விழாவும், அவரது  குலதெய்வமான வீரசக்கதேவி ஆலய திருவிழாவும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

அதே போல இந்த ஆண்டும் கொண்டாப்படும் இந்திய விடுதலைக்கு முதல் முழக்கமிட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் விழாவை  முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் பாஞ்சாலாங்குறிச்சியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் திருஉருவச்சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.மதன், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், வீரசக்கதேவி ஆலக்குழு நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு பாஞ்சாலங்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.