தூத்துக்குடி வடக்கு ரத வீதி முத்தாரம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு, ஹரிஸ்மா கோல்டு பைனாஸ் உரிமையாளர் திருச்சிற்றம்பலம் சார்பில் நாளை ( மே 12 ) 4000 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

தூத்துக்குடி வடக்கு ரத வீதி முத்தாரம்மன் கோவில் கொடை விழா 2 நாட்கள்  நடைபெறுகிறது. அம்மனுக்க சிறப்பு பூஜைகள், அபிஷேக அலங்கார தீபாரதனைகள், நடந்து வருகிறது. இன்று ( மே 11 ) இரவு 8 மணிக்கு மாகாப்பு தீபாரதனை நடைபெற்றுகிறது. நாளை ( மே 12 ) காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், 9 மணிக்கு பால்குடம், 10.30 மணிக்கு அபிஷேகம், 12 மணிக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றுகிறது.

அதனைத்தொடர்ந்து ஹரிஸ்மா கோல்டு பைனான்ஸ் உரிமையாளர் திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டில் 4000 பேருக்கு மகா அன்னதானம் நடைபெறுகிறது.இதில், நான்கு வகை கூட்டு பொரியல், பாயசம், அப்பளம், வடை, சாம்பார், வத்தக்குழம்பு, ரசம், மோர், தண்ணீர் பாட்டிலுடன் அன்னதானம் நடக்கிறது. அன்னதானமானது மாலை 4 மணி வரை தொடர்ச்சியாக நடக்கிறது.

இந்த அன்னதானத்தில் பொதுமக்கள் பக்தர்கள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.