தூத்துக்குடியில் காவல் நிலையம் பக்கத்துலயேவா? ஏடிஎம்-க்குள் புகுந்த வாலிபர் - கடைசியில் நடந்தது என்ன?
நிருபர்
April 27, 2026
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகே உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். வங்கி அலாரம் கொடுத்த தகவலால் 15 லட்சம் ரூபாய் தப்பியது. முழு விவரங்களை இங்கே படிக்கவும்

தூத்துக்குடியில் காவல் நிலையம் அருகிலேயே உள்ள வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை, போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகே உள்ள தேவர்புரம் சாலையில் இந்தியன் வங்கி மற்றும் அதன் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இன்று அதிகாலை சுமார் 1:30 மணி அளவில், இளைஞர் ஒருவர் சைக்கிளில் வந்து வங்கியின் அருகே நிறுத்தினார். பின்னர் ஏடிஎம் மையத்திற்குள் சென்ற அவர், தான் வைத்திருந்த ஸ்குரு டிரைவரால் ஏடிஎம் இயந்திரத்தின் வெளிப்பக்க கதவை உடைத்து பணத்தை திருட முயன்றுள்ளார்.

இயந்திரம் உடைக்கப்பட்ட அடுத்த சில வினாடிகளில், வங்கியின் தலைமை சர்வர் அறையில் அபாய சங்கு (Alarm) ஒலித்தது. இது குறித்து வங்கி மேலாளருக்கு உடனடியாக தகவல் சென்றது. அவர் தாமதிக்காமல் தூத்துக்குடி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார், ஏடிஎம் மையத்திற்குள் இயந்திரத்தை உடைத்துக் கொண்டிருந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர் தூத்துக்குடி கணேசன் காலனி 2-வது தெருவைச் சேர்ந்த மாரிச்செல்வம் (22) என்பது தெரியவந்தது.

சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, மாரிச்செல்வம் மட்டுமே இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. அந்த ஏடிஎம் இயந்திரத்தில் சுமார் 15 லட்சத்திற்கும் மேல் பணம் இருந்ததாக கூறப்படுகிறது. சரியான நேரத்தில் அலாரம் அடித்ததால் பெரும் கொள்ளை சம்பவம் தவிர்க்கப்பட்டது.

வங்கி மேலாளர் பிரபு அளித்த புகாரின் பேரில், தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிச்செல்வத்தை கைது செய்தனர். காவல் நிலையம் அருகிலேயே நடந்த இந்த கொள்ளை முயற்சி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.