மார்கண்டேயனுக்கு எதிராக விளாத்திகுளம் தேர்தல் களத்தில் ரெட்டியார் சங்கம்... பின்னணி என்ன?
நிருபர்
April 18, 2026
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விளாத்திகுளம் தேர்தல் அரசியல் வானிலை வழக்கத்திற்கு மாறாகத் தென்படுகிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விளாத்திகுளம் தேர்தல் அரசியல் வானிலை வழக்கத்திற்கு மாறாகத் தென்படுகிறது.

அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட விளாத்திகுளம் தொகுதியை 2021 தேர்தலில் திமுக கைப்பற்றிய நிலையில், இந்த முறை விட்டு விடக்கூடாது என்ற அதீத முனைப்போடு அதிமுகவும், கைப்பற்றிய அதிமுக கோட்டையை விட்டு விடக்கூடாது என மிகக் கவனமாக இருக்கும் திமுகவும் என இரு கட்சிகளும் கடும் போட்டியோடு தேர்தல் களத்தில் பணியாற்றி வருவதால், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியானது பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் காணப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில், திமுக சார்பில் சிட்டிங் எம்எல்ஏ மார்கண்டேனும், அதிமுக சார்பில் முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யாவும் போட்டியிடுகின்றனர். அது போக தவெக சார்பில் பொன் காசிராம், நாதக சார்பில் பாலாஜி ஆகியோரும் போட்டியிடுகின்றனர். ஆனால் இங்கே போட்டி என்பது திமுக - அதிமுக இடையே மட்டும் தான் கடுமையாக இருக்கிறது.

ஏப்ரல் 23 ம் தேதி வாக்குபதிவு நடைபெற உள்ள நிலையில், இன்னும் ஒரு வார காலமே இருப்பதால், தேர்தல் பரப்புரை தொகுதியில் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தற்போது திமுக வேட்பாளர் மார்கண்டேயனுக்கு எதிராக ரெட்டியார் சங்கம் பரப்புரையில் இறங்கி இருப்பது தான், தொகுதியில் எதிர்பாராத திருப்பத்தையும், மார்கண்டேயனுக்கு அதிர்ச்சியையும் தந்துள்ளது.

இதன் பின்னணியை விசாரிக்கையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விளாத்திகுளத்தில் மார்கண்டேயன் எம்எல்ஏவிற்கு சொந்தமான மண்டபத்தில் ரெட்டியார் சமுதாய மக்களின் குடும்ப விழா நடைபெற்றுள்ளது. இவ்விழாவிற்கான அழைப்பிதழில் எம்எல்ஏ மார்கண்டேயன் பெயர் சிறியதாக அச்சிடப்பட்டிருந்ததாம், இதனால் ஆத்திரம் அடைந்த மார்கண்டேயன், உள்ளூர் ரெட்டியார் சங்க நிர்வாகிகளை அழைத்து அச்சில் ஏற்றமுடியாத வார்த்தைகளால் ஏகத்திற்கும் வசைபாடியுள்ளார். அதிலும் ஆத்திரம் அடங்காத அவர் ஒரு கட்டத்தில் ரெட்டியார் சங்க நிர்வாகி ஒருவரை கன்னத்தில் பளார் விட்டுள்ளாராம்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நிர்வாகிகள், இத்தகவலை தலைமை நிர்வாகிகளுக்கு சொல்ல, இந்த ஆண்டு தேர்தல் வருகிறது அப்போது நாம் யார் என்பதை காட்டுவோம் கொஞ்சம் பொறுங்கள். முதலில் விழாவை நடத்தி முடியுங்கள் என்று சொல்லி விளாத்திகுளம் ரெட்டியார் சங்க நிர்வாகிகளை சமாதானப்படுத்தியுள்ளனர். இதனையடுத்தே, தற்போது தேர்தல் வாக்குப்பதிவிற்கு ஓரிரு நாட்களே உள்ளே நிலையில், சென்னையில் இருந்து ரெட்டியார் சங்க தலைமை நிர்வாகிகள் விளாத்திகுளம் தொகுதியிலே முகாமிட்டு ஊர் ஊராக சென்று மார்கண்டேயனுக்கு எதிராக திண்ணை பிரச்சாரம் செய்து வருகின்றனராம்.

கடந்த 2021 தேர்தலில் திமுக சட்டமன்ற உறுப்பினராக மார்கண்டேயன் வெற்றி பெற்ற கையோடு, அச்சில் ஏற்றமுடியாத வார்த்தைகளால் வசைபாடி காற்றாலை நிறுவனங்களை மிரட்டியது முதல் மணல் திருட்டு, கண்மாய் ஆக்கிரமிப்பு என இயற்கை வளங்கள் சுரண்டல் வரை தொகுதி மக்களிடம் நினைவு கூர்ந்து தங்களது பிரச்சாரத்தை முன் வைக்கின்றனராம். இதனை சற்றும் எதிர்பார்க்காத மார்கண்டேயனுக்கு, இச்சம்பவம் அதிர்ச்சியையும் தந்துள்ளதாம்.

விளாத்திகுளம் தொகுதியை பொறுத்தவரையில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக ரெட்டியார் சமூக வாக்குகளே இருப்பதால், அச்சமூகத்தின் சங்கத்தினர் மார்கண்டேயனுக்கு எதிராக தேர்தல் களத்தில் இறங்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.