இறுதிகட்ட பிரச்சாரம்... பொதுமக்களால் விரட்டப்படுகிறாரா திமுக வேட்பாளர் மார்கண்டேயன்?
நிருபர்
April 20, 2026
இறுதிகட்ட பிரச்சாரம்... பொதுமக்களால் விரட்டப்படுகிறாரா திமுக வேட்பாளர் மார்கண்டேயன்?

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்கள் அனல் பறக்கும் பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதிலும் குறிப்பாக விளாத்திகுளம் தேர்தல் களத்தில் அனல் தகிக்கிறது.

விளாத்திகுளம் அதிமுகவின் கோட்டை எனச் சொல்லப்பட்டு வந்த நிலையில், அதை மாற்றும் முனைப்போடு 2021 தேர்தலில் களமிறங்கி வெற்றி கண்டார் தற்போதைய தொகுதி சிட்டிங் திமுக எம்எல்ஏ மார்கண்டேயன். திமுகவின் செல்வாக்கை நிரூபிக்கும் நோக்கோடு, 2026 தேர்தலில் திமுக சார்பில் மார்கண்டேயன் மீண்டும் விளாத்திகுளத்தில் களமிறக்கப்பட்டுள்ளார்.

அதே வேளையில், மார்கண்டேயன் வியூகங்களை நொறுக்க, அதிமுகவின் புதுமுக பெண் வேட்பாளர் சத்யாவின் வெற்றிக்காக, அதிமுகவினரும் தீவிரமாக களத்தில் செயலாற்றி வருகின்றனர்.

இந்த சட்டசபை தேர்தலில் விளாத்திகுளம் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய தொகுதியாக ஆகியுள்ளது. இத்தொகுதி ரிசல்ட் எப்படி இருக்கப்போகிறது என்பதை அறிய அரசியல் நோக்கர்கள் ஆவலாகக் காத்திருக்கின்றனர். விளாத்திகுளத்தை கைப்பற்றுவது யார் என்பது தான் தொகுதி மக்களின் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

ஆரம்பத்தில் அதிமுக வேட்பாளர் சத்யாவை பெரிதாக கருதாமல் தேர்தல் களப்பணியை எதார்த்தமாக மேற்கொண்ட திமுக மார்கண்டேயனுக்கு தேர்தல் நாள் நெருங்க நெருங்க பீதியை கிளப்பும் வகையில் தொகுதியின் கள நிலவரம் மாற தொடங்கியதாக சொல்லப்படுகிறது. நம்முடைய வெற்றி எழுதப்பட்ட ஒன்று என்ற மிதப்பில் இருந்த மார்கண்டேயனுக்கு, எப்படியாவது வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற பதட்டத்தை இறுதி கட்ட தேர்தல் களம் காட்டியிருக்கிறதாம். இதனால், தொகுதி வாக்காளர்களுக்கு திமுக தரப்பில் 1.5 K விட்டமின்கள் கொடுக்கப்பட்டு வருகிறதாம்.

கடந்த தேர்தலில் சுமார் 38 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மார்கண்டேயனுக்கு ஏன் இந்த தடுமாற்றம் என்று விசாரிக்கையில்,

"கடந்த தேர்தலில் மார்கண்டேயனை பெரிதும் நம்பி வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றமே இறுதியில் மிஞ்சியதாம். அதனால் இம்முறை அவரை நம்ப நாங்கள் தயாராக இல்லை என்றும் அவருக்கு எங்களது வாக்குகள் இல்லை என்றும் மக்கள் மார்கண்டேயனுக்கு எதிராக கொதிக்க துவங்கியுள்ளனர்".

அதன் வெளிப்பாடாகவே, பனையூர், கலைஞானபுரம், நெடுங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் மார்கண்டேயன் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, பெண்கள் உட்பட கிராம மக்கள் அவரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். கடந்த முறை கொடுத்த வாக்குறுதிகளையே நீங்கள் இன்னும் நிறைவேற்றவில்லை. இப்பொழுது எதற்கு வந்தீர்கள் என மார்கண்டேயனை பிரச்சாரம் செய்யவிடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு கட்டத்தில் நான் பல கிராமங்களுக்கு பிரச்சாரம் செய்யவேண்டியுள்ளது என கூறி மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறியவாறு அப்பகுதிகளில் இருந்து எஸ்கேப் ஆகியுள்ளாராம். இதனையடுத்து, பொதுமக்கள் மார்கண்டேயனை பிரச்சாரம் செய்யவிடாமல் விரட்டி அடித்த சம்பவம் விளாத்திகுளம் தேர்தல் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, தற்போது தன்னுடைய தொகுதி சார்ந்த வளர்ச்சி செயல்பாடுகளை வீடியோ மூலம் வெளியிட்டு பிரச்சாரம் செய்யும் நடவடிக்கையையும் மார்கண்டேயன் மேற்கொண்டுள்ளார்.