<p><b>தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர் கெட்டுவிட்டது எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை. இதை இந்த அரசால் தடுக்க முடியவில்லை? ஏன் என்றால் திமுகவினர் தான் கஞ்சா விற்பனையில் ஈடுபடுகிறார்கள். அதனால் போலீஸால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை.&nbsp;</b></p><p><br></p><p>அதிமுக ஆட்சிக்கு வந்த பின் மூன்றே மாதத்தில் கஞ்சா விற்பனை ஒழிக்கப்படும் என அண்ணன் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஆகவே, மூன்றே மாதத்தில் கஞ்சா விற்பனை ஒழிக்க அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும். அதற்கு நீங்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என பூபாலராயபுரம், கருப்பட்டி சொசைட்டி, முத்து கிருஷ்ணாபுரம், கிருஷ்ணாபுரம், அன்னை வேளாங்கண்ணி நகர், டேவிஸ் புரம் மெயின் ரோடு, ஆகிய பகுதிகளில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு&nbsp; தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் தெரிவித்தார்.</p>