ரிட்டன் 2016... திமுக மார்கண்டேயன் சீனை சிதறடித்த அதிமுக சத்யா : பரபரக்கும் விளாத்திகுளம்!
நிருபர்
April 03, 2026
விளாத்திகுளத்தில் நடைபெற்ற அதிமுக வேட்பாளர் சத்யாவின் அறிமுகம் கூட்டம், அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினரால் தெறிவிக்க விட்டதாக விளாத்திகுளம் தொகுதியில் பேசப்பட்டு வருகிறது.

திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு வருகை தந்த சிட்டிங் எம்எல்ஏ மார்கண்டேயனுக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் உற்சாக வரவேற்பு கொடுத்து மாஸ் சீன் காட்டிய நிலையில், அந்த சீனை சிதறடிக்கும் வகையில், விளாத்திகுளத்தில் நடைபெற்ற அதிமுக வேட்பாளர் சத்யாவின் அறிமுகம் கூட்டம், அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினரால் தெறிவிக்க விட்டதாக விளாத்திகுளம் தொகுதியில் பேசப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக 2 வது முறையாக மார்கண்டேயன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் புதுமுக பெண் வேட்பாளர் சத்யா போட்டியிடுகிறார். இந்த நிலையில் தொகுதியில் யார் கை ஓங்கி இருக்கிறது என்பதை காட்டும் விதமாக இரு கட்சி வேட்பாளர்களும் தேர்தல் பணிகளில் மாறி மாறி கூட்டத்தை காட்டி போட்டி போட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக மார்கண்டேயன்

அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 30ஆம் தேதி விளாத்திகுளம் வந்த அவருக்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்து மாஸ் சீன் காட்டினர்.

இந்த நிலையில், இன்று ( 03.04.2026 ) விளாத்திகுளத்தில் அதிமுக வேட்பாளர் சத்யாவின் அறிமுகம் கூட்டம் நடைபெற்றது. தனியார் மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றாலும் மக்கள் கூட்டமானது விளாத்திகுளம் பஜார் எங்கும் பரவலாக காணப்பட்டது. இதனை கண்ட மக்கள் பலரும் போட்டி இருவருக்கும் கடுமையாக இருக்கும் என்றும், அதிமுக வேட்பாளரை எதிர்கொள்ள திமுக வேட்பாளர் கடுமையாக போராடக்கூடிய சூழலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் பேச ஆரம்பித்துள்ளனர்.

விளாத்திகுளம் தொகுதியில் இதுவரை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவே அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. ஆகவே, விளாத்திகுளம் தொகுதி அதிமுகவின் எஃகு கோட்டை என்று சொல்லப்படுவதுண்டு. இந்த நிலையில், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் இத்தொகுதி திமுக வசம் சென்றுவிட்டது. ஆகவே, இழந்த கோட்டையை 2026 ல் மீட்க வேண்டும் என்ற முனைப்போடு தொகுதி அதிமுகவினர் விளாத்திகுளம் தொகுதியில் படுதீவிரமாக களப்பணி ஆற்றிவருகின்றனர். அதோடு அதிமுகவின் கோட்டையாக இருந்த தொகுதிகள் கடந்த தேர்தலில் எவையெல்லாம் கைவிட்டு போனதோ, அந்தத் தொகுதிகளின் மீது தனிப்பார்வையை செலுத்தி, அத்தொகுதிகளை இத்தேர்தலில் மீட்பது தான் தனது தலையாய கடமையாக அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கருதி வருகிறாராம்.

மேலும், கட்சியில் அடிமட்ட தொண்டனும் எம்எல்ஏ, எம்பி, அமைச்சராக ஆகலாம் என்ற நிலையை உருவாக்கும் ஒரே கட்சி அது அதிமுக மட்டுமே என்ற பெயரை எம்ஜிஆர், ஜெயலலிதா வைத்திருந்தனர். அதையே தானும் தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி,

அதை வெளிக்காட்டும் விதமாக 2026 சட்டமன்ற தேர்தலில் விளாத்திகுளம் தொகுதியில் புதுமுக பெண் வேட்பாளராக முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யாவை களம் இறக்கி இருக்கிறாராம்.

ஆகவே, 2016 தேர்தலில் விளாத்திகுளம் தொகுதியில் ஜெயலலிதாவால் களம் இறக்கப்பட்டு வெற்றி வாகை சூடிய புதுமுக பெண் வேட்பாளர் உமா மகேஷ்வரி போல, 2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமியால் களம் இறக்கப்பட்டு நிச்சயம் வெற்றி வாகை சூடுவார் புதுமுக பெண் வேட்பாளர் சத்யா என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் தொகுதியின் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சியினர்.

கோடை வெப்பம் அதிகமாகிறதோ இல்லையோ, விளாத்திகுளம் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.