கட்டபொம்மன் நகரில் என்டிஏ தெருமுனைப் பிரச்சாரம் : சரவெடியாய் வெடித்த சி.த.செல்லப்பாண்டியன் தேர்தல் பரப்புரை பேச்சு!
நிருபர்
April 03, 2026
கட்டபொம்மன் நகரில் என்டிஏ தெருமுனைப் பிரச்சாரம் : சரவெடியாய் வெடித்த சி.த.செல்லப்பாண்டியன் தேர்தல் பரப்புரை பேச்சு!

தூத்துக்குடி கட்டபொம்மன் நகரில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் சார்பில் தெருமுனைப் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் கலந்து கொண்டு பேசுகையில்:-

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தில் மக்களுக்கு உதவி செய்ய களத்தில் யார் வந்தார்கள், வரவில்லை என்று மக்களுக்கு நன்றாக தெரியும்.

15 நாட்களுக்கு மேலாக என் வீட்டில் உணவு தயார் செய்து, மழை நீரில் செல்ல தோதுவாக டிராக்டர் வாகனத்தில் உணவை அனுப்பி வைத்துள்ளோம்.

2 முறை அமைச்சர், எம்எல்ஏவாக இருந்து கீதாஜீவன் நீங்கள் செய்த சாதனை என்ன? நீங்க செய்த ஒரே சாதனை அழுகின முட்டை போட்டது தான். அதுக்கு வேற ஒரு விளக்கம். முட்டை மேல மை உள்ளே போனதாம்.

தூத்துக்குடி மாநகராட்சியில் தீர்வை கூட்டப்பட்டு மக்களை இந்த மேயர் ஜெகன் வஞ்சித்துள்ளார். தூத்துக்குடியில் மோசமான நிர்வாகத்தை அக்கா தம்பி இருவரும் செஞ்சுட்டு வாரங்க.

சிமெண் ரோட்டை உடைத்து, தார் ரோடு போடுறாது, மாத்தி மாத்தி திரும்ப திரும்ப டெண்டர் போட்டு மக்கள் வரிப்பணத்தை வீணடித்து கொள்ளையடித்து வருபவர் தான் மேயர் ஜெகன். அவர் எங்களை மழை வெள்ளத்தில் தலைகாட்ட வில்லை என்று சொல்கிறார்.

இன்னும் சாக வில்லையே, சாக வில்லையேனு என்று மக்கள் நினைத்த ஒரே தலைவர் கருணாநிதி தான். அதனால் தான் திமுகவையும் கருணாநிதியும் தீய சக்தினு சொல்லி எங்க தலைவர் எம்ஜிஆர் அங்கிருந்து வெளியேறினார்.

தூத்துக்குடி முத்துநகர் பீச்சை கொண்டு வந்தது நான் தான். அதற்கு சாட்சி கல்வெட்டே இருக்கிறது. ஆனால், இப்ப பெயிண்டை அசிட்டு நீங்க கொண்டு வந்த மாதிரி நீங்க கல்வெட்டு வச்சிருக்கீங்க.

சிவன் சொத்து குல நாசம் என்று சொல்வார்கள். சிவன் கோவில் சொத்தில் ஆட்டுச்சந்தை வைத்து ஆட்டைய போடநினைத்தார்கள் அது முடியல. மெடிக்கல் காலேஜ் வேற கட்டுராங்களாம். எல்லாம் மக்கள் வரிப்பணம். கொள்ளையடிச்ச பணம் தான்.

இன்னைக்கு எங்கே பார்த்தாலும் கஞ்சா நடமாடுகிறது. அது தான் திமுகவின் ஆட்சி லட்சணம். கள்ளக்குறிச்சி சாராய சாவும் இந்த ஆட்சியில் தான்.

தூத்துக்குடி மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன், கேன்சர் நோய் சிகிச்சைக்கு தனி கட்டிடம் கொண்டு வந்தது நான்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ரோட்ட கடைகளை ஹிந்து காரனுக்கு ஒதுக்கி அதற்கு பணம் வசூல் பன்னூறாங்க. அந்த பணத்தை திமுக காரங்க தான் வசூல் பன்னுறாங்க. ஏன் தமிழ் காரங்க வியாபாரம் பன்ன ஆள் இல்லையா? ஏன் ஹிந்தி காரங்களுக்கு ஒதுக்குறீங்க? உங்கள் ஆட்டம் எல்லாம் ஏப்ரல் 23 ஆம் தேதியோடு முடியப்போகிறது என்றார்.