<p><b>தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு, கருத்தரங்கம் நடைபெற்றது</b>.</p><p>இந்த கருத்தரங்கிற்கு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.</p><p>கருத்தரங்கில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், தாய்ப்பாலின் மகத்துவம் அதன் முக்கியத்துவம் மற்றும் தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும், சேய்க்கும் ஏற்படும் நன்மைகள் குறித்து&nbsp; எடுத்துரைத்தார்.</p><p>இந்த கருத்தரங்கிற்கு, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட இயக்குநர்&nbsp; அமுதவல்லி , மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>