தூத்துக்குடியில் உலக தாய்ப்பால் வார விழா கோலப்போட்டி - அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்!
நிருபர்
August 01, 2022
தூத்துக்குடியில் உலக தாய்ப்பால் வார விழா கோலப்போட்டி - அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்!தூத்துக்குடி செய்திகள் Thoothukudi news local news லோக்கல் நியூஸ் online news online tamil news தமிழ் செய்திகள் தமிழ் நியூஸ்

தூத்துக்குடியில் நடைபெற்ற உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு, கோலப்போட்டியை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

தூத்துக்குடியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை சார்பில் உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு, தாய்ப்பாலின் மகத்துவம் குறித்த கோலப்போட்டி, பாளைரோடு, மில்லர்புரம் வ.உ.சி கல்லூரி அருகே கோளரங்கம் முன்பு நடைபெற்றது.

இப்போட்டியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்வில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட இயக்குநர் அமுதவல்லி, மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜ், ஆணையர் சாருஸ்ரீ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கோலப்போட்டியில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள், தூத்துக்குடி மாநகராட்சி, கல்லூரி மாணவர்கள் சார்பில் கலந்து கொண்டு கோலங்கள் வரைந்தனர்.

தொடர்ந்து, செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிநவீன மின்னணு வாகனத்தில் திரையிடப்பட்ட தாய்ப்பால் வார குறும்பட ஒளிபரப்பை தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.