முதல்வருக்கு மக்காச்சோள கதிர்களை தபாலில் அனுப்ப கோவில்பட்டி தபால் நிலையம் முன்பு குவிந்த விவசாயிகளால் பரபரப்பு!
நிருபர்
February 26, 2026
மக்காச்சோளத்தை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்ய வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் மற்றும் விவசாயிகள் வினோதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்காச்சோளத்தை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்ய வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் மற்றும் விவசாயிகள் வினோதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையான ரூ. 2,400-க்கு மக்காச்சோளத்தை தமிழக அரசே நேரடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும். விலையைச் செயற்கையாகக் குறைக்கும் இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்லுக்கு இருப்பது போல மக்காச்சோளம் மற்றும் நவதானியங்களுக்கும் தனி கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும்.

பெண்களுக்கு வழங்கப்பட்டது போல, வறட்சியைக் கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு ரூ. 10,000 கோடைக்கால சிறப்பு நிதி வழங்க வேண்டும். விவசாய நிலங்களைச் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்தி விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டும்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவர் ராஜகோபால் தலைமையில், கோவில்பட்டி தலைமை தபால் நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாக, தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனுவுடன் மக்காச்சோள கதிர்களையும் தபால் மூலம் அனுப்பி நூதன முறையில் போராட்டத்தை நடத்தினர்.

இந்த நிகழ்வில் கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜன், தமாகா நகரத் தலைவர் வழக்கறிஞர் கருப்பசாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் கனி மற்றும் மாவட்ட, வட்டார அளவிலான முக்கிய நிர்வாகிகள், மகளிரணி உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.