தூத்துக்குடி மாநகராட்சியில் பரபரப்பு... பட்ஜெட் கூட்டத்தை புறக்கணித்த அதிமுக - காரணம் என்ன?
நிருபர்
February 26, 2026
தூத்துக்குடி மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் கூட்டம், இன்று மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆளுங்கட்சியான திமுக அரசுக்கு எதிராக அதிமுக மாமன்ற கொறடா மந்திரமூர்த்தி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் கடும் கோஷங்களை எழுப்பி

தூத்துக்குடி மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் கூட்டம், இன்று மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆளுங்கட்சியான திமுக அரசுக்கு எதிராக அதிமுக மாமன்ற கொறடா மந்திரமூர்த்தி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் கடும் கோஷங்களை எழுப்பி வெளிநடப்பு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தூத்துக்குடி மாநகர வளர்ச்சிக்கு திமுக அரசு எந்தவித புதிய திட்டங்களையும் கொண்டு வரவில்லை எனப் புகார். மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் தொழில் வரி உயர்வு போன்றவற்றால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசின் வரி உயர்வைக் கண்டித்து "விடியா ஆட்சி... வீட்டுப் பில்லே சாட்சி" என்ற வாசகம் அடங்கிய பதாகைகளுடன் அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பட்ஜெட் உரையின் போது, திமுக அரசுக்கு எதிராகக் கண்டனக் கோஷங்களை எழுப்பியபடி அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திலிருந்து வெளியேறினர். இந்த வெளிநடப்பில் அதிமுக கொறடா மந்திரமூர்த்தியுடன், மாமன்ற உறுப்பினர்கள் வெற்றி செல்வன், ஜெயலட்சுமி, பத்மாவதி, ஜெயராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் ஒட்டுமொத்தமாக வெளியேறிய நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.