விளாத்திகுளம் அருகே சோகம்: வாலிபரின் விபரீத முடிவால் பறிபோன உயிர்!
நிருபர்
February 25, 2026
தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி அருகே, மது அருந்துவதை தாய் கண்டித்ததால் மனமுடைந்த வாலிபர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி அருகே, மது அருந்துவதை தாய் கண்டித்ததால் மனமுடைந்த வாலிபர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேல்மாந்தை நடுத்தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் தனஜெயம் (24). கூலி வேலை செய்து வந்த தனஜெயத்திற்கு, மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. தினமும் வேலை முடிந்து மது போதையில் வீடு திரும்புவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

வழக்கம்போல நேற்று மது அருந்திவிட்டு வந்த தனஜெயத்தை, அவருடைய தாய் கண்டித்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூரங்குடி காவல் நிலைய போலீசார், தனஜெயத்தின் உடலைக் கைப்பற்றியநிலையில், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.