தூத்துக்குடியில் மின்கம்பம் நட பணம் பேரம் : இளநிலைப் பொறியாளா் சஸ்பெண்ட்
நிருபர்
May 08, 2024
தூத்துக்குடியில் மின்கம்பம் நட பணம் பேரம் : இளநிலைப் பொறியாளா் சஸ்பெண்ட்
<p><b>தூத்துக்குடியில் மின்கம்பம் நடுவதற்கு மின்நுகா்வோரிடம் பணம் வசூலிப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து, இளநிலைப் பொறியாளா் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். </b><br></p><p>தமிழகத்தில் விரிவாக்கப் பணிகளின்போது மின்கம்பம் நடுவதற்கு மின்நுகா்வோரிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என விதிகள் உள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை மின்வாரிய அலுவலக இளநிலைப் பொறியாளரான தேவசுந்தர்ராஜ், மின்கம்பம் நடுவதற்கு மின்நுகா்வோரிடம் பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. </p><p>இந்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவியது. இதுதொடா்பாக அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினா். இதையடுத்து, அவா் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.</p>