தூத்துக்குடியில் அணையின் நிலவரத்தை கண்காணியுங்கள்... ஆய்வுக்கு பின் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு!
நிருபர்
November 22, 2025
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், ஸ்ரீவைகுண்டம் அணைகட்டினை பார்வையிட்டு அலுவலர்களை அணையின் நிலவரத்தை கண்காணிக்குமாறு அறிவுரைகள் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், ஸ்ரீவைகுண்டம் அணைகட்டினை பார்வையிட்டு அலுவலர்களை அணையின் நிலவரத்தை கண்காணிக்குமாறு அறிவுரைகள் வழங்கினார்.

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலையில், நெல்லை, தூத்துக்குடியில் இன்று மாலை முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந்தூர், உடன்குடி, குலசை, காயல்பட்டினம், ஆத்தூர், ஆறுமுகநேரி, நாசரேத் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், இன்று ( 22.11.25 )

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், ஸ்ரீவைகுண்டம் அணைகட்டினை பார்வையிட்டு அலுவலர்களை அணையின் நிலவரத்தை கண்காணிக்குமாறு அறிவுரைகள் வழங்கினார்.