முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான ஜூடோ போட்டி தூத்துக்குடி மாணவர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான ஜூடோ போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த 3 நாட்கள் நடைபெற்றது..

இப்போட்டிகளில், ஒவ்வொரு மாவட்டத்தின் சார்பாக 7 மாணவர்களும் 7 மாணவிகள் என மொத்தம் 400க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில், தூத்துக்குடி மாவட்ட மாணவர்கள் 60கிகி உட்பட்ட எடை பிரிவில் ஆகாஷ்ராஜ் தங்கப்பதக்கமும் திலிப் வெண்கலப் பதக்கமும் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர்.

மேலும், தமிழக அரசின் ரொக்க பரிசு தங்கப் பதக்கத்திற்கு ரூபாய் 1 லட்சமும் வெண்கலப் பதக்கத்திற்கு ரூபாய் 50 ஆயிரம் பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை பயிற்சியாளர் சுரேஷ் குமார், தமிழ்நாடு ஜூடோ சங்க தலைவர் விஜயமோகன முரளி, பொது செயலாளர் முரளி, தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் பேட்ரிக் வின்சென்ட், தூத்துக்குடி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்  பால்சாமி, தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் ஜூடோ சங்கத்தின் தலைவர் மாணிக்கராஜ், செயலாளர் ராமலிங்க பாரதி, பொருளாளர் முத்து சங்கர், குமார் ஆகியோர்  பாராட்டினார்கள்..