திடீரென வீசிய பலத்த சூறைகாற்றால் ஏற்பட்ட எதிர்பாராத சம்பவம்... சற்றும் தாமதிக்காத சண்முகையா எம்எல்ஏ!
நிருபர்
August 18, 2025
பலத்த சூறைகாற்றினால் முறிந்து விழுந்த மின்கம்பங்களை சரிசெய்ய நடவடிக்கை எடுத்ததோடு, மின்கம்பங்கள் கீழே விழுந்த இடத்திற்கு நேரில் சென்று மின்கம்பங்களை சரிசெய்யும் பணிகளை சண்முகையா எம்எல்ஏ நேரில் பார்வையிட்டார்

பலத்த சூறைகாற்றினால் முறிந்து விழுந்த மின்கம்பங்களை சரி செய்ய நடவடிக்கை எடுத்ததோடு, மின்கம்பங்கள் கீழே விழுந்த இடத்திற்கு நேரில் சென்று மின்கம்பங்களை சரிசெய்யும் பணிகளை சண்முகையா எம்எல்ஏ நேரில் பார்வையிட்டார்

ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் மேலபாண்டியபுரம் ஊராட்சி கந்தசாமிபுரம் கிராமத்தில் இன்றைய தினம் வீசிய பலத்த சூறைகாற்றினால் கந்தசாமிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள மின்கம்பங்கள் முறிந்து கீழே விழுந்து மின்தடை ஏற்பட்டது.

பொதுமக்கள் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையாவிடம் தெரிவித்தை தொடர்ந்து உடனடியாக மின்வாரிய அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கீழே விழுந்த விரைந்து சரி செய்யுமாறு கூறினார்.

அதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா மின்கம்பங்கள் கீழே விழுந்த இடத்திற்கு நேரில் சென்று மின்கம்பங்களை சரிசெய்யும் பணிகளை பார்வையிட்டார். மேலும், பணிகளை துரிதப்படுத்தி இரவுக்குள் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வண்ணம் மின்விநியோகம் வழங்குமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். மேலும் சேதமடைந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை உடனடியாக மாற்றவும் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்வின் போது, மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுடலைமுத்து, உதவி பொறியாளர் சண்முகத்தாய் மற்றும் மின்வாரிய அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்