பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழா : தூத்துக்குடி கலெக்டர் முக்கிய அறிவிப்பு!
நிருபர்
May 08, 2025
வீரசக்கதேவி ஆலய திருவிழா அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் பொருட்டும், சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரித்திடவும், 08.05.2025 மாலை 06.00 மணி முதல் 11.05.2025 காலை 06.00 மணி வரை தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா - 2

வீரசக்கதேவி ஆலய திருவிழா அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் பொருட்டும், சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரித்திடவும், 08.05.2025 மாலை 06.00 மணி முதல் 11.05.2025 காலை 06.00 மணி வரை தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா - 2023 சட்டப்பிரிவு 163(1) -ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், பாஞ்சாலங்குறிச்சியில் 09.05.2025 மற்றும் 10.05.2025 தேதிகளில் நடைபெறவுள்ள வீரசக்கதேவி ஆலய திருவிழா அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் பொருட்டும், சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரித்திடவும், 08.05.2025 மாலை 06.00 மணி முதல் 11.05.2025 காலை 06.00 மணி வரை தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா - 2023 சட்டப்பிரிவு 163(1) -ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், தூத்துக்குடி மாவட்டத்திலிருந்தும் பிற மாவட்டங்களிலிருந்தும் வந்து விழாவில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் வாள், கத்தி, கம்பு, போன்ற அபாயகரமான ஆட்சேபகரமான ஆயுதங்கள் ஊர்வலமாக கொண்டு வருவதற்கும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாகவும் திருவிழாவிற்கு கலந்து கொள்ள அழைத்து வரப்படுவதற்கும் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இத்தடை உத்தரவிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவிற்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் தினசரி செல்லும் ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றிற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேற்படி நாட்களில் வேறு ஏதேனும் கூட்டங்கள், அன்னதானம் மற்றும் ஊர்வலங்கள் நடத்தவிருப்பின் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை அணுகி முன் அனுமதி பெற்றுக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் இத்தடையுத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்கு ஊர்வலங்களுக்குப் பொருந்தாது என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், தெரிவித்துள்ளார்.