தூத்துக்குடியில் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழா : 5 ஆயிரம் பேருக்கு நலதிட்ட உதவிகள் வழங்கல்!
நிருபர்
May 11, 2025
தூத்துக்குடியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

தூத்துக்குடியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

தூத்துக்குடியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி 71 வது பிறந்த நாளை முன்னிட்டு வர்த்தக அணி சார்பில் சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே 5 ஆயிரம் நபர்களுக்கு நலதிட்ட உதவிகளை வர்த்தகஅணி துணை செயலாளர் R.L.ராஜா தலைமையில், வர்த்தக அணி மாநில செயலாளரும், முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின் போது, மாற்று கட்சியில் இருந்து 100 இளைஞர்கள் அதிமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில், மகளிர் அணி துணைச் செயலாளர் டாக்டர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நீலமேகவர்ணம், தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம், தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார், மகளிர் அணி துணைச் செயலாளர் சண்முகத்தாய், மீனவரணி பொருளாளர் அந்தோனியப்பா உட்பட பலர் கலந்து கொண்டனர்.