விளாத்திகுளம் அருகே மின்சாரம் தாக்கி லாரி ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழப்பு!
நிருபர்
December 04, 2024
விளாத்திகுளம் அருகே மின்சாரம் தாக்கி லாரி ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழப்பு!

விளாத்திகுளம் அருகே மின்சாரம் தாக்கி லாரி ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியில், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தை சேர்ந்த நெல்லையப்பன் என்பவரது மகன் முருகன் (42). இவர் லாரி ஓட்டுனராக வேலை செய்து வந்துள்ளார். அதேபோல் வீட்டின் முன்பு வாசலில் தொழுவம் அமைத்து ஆடுகளும் வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஆட்டுத் தொழுவத்தில் இருந்த கொடியை தொட்டபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து முருகனின் உடலை கைப்பற்றிய விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.