<p><b>சாத்தான்குளம் ஒன்றிய இந்து அன்னையர் முன்னணி சார்பில்&nbsp; மோடிநகரில் மஞ்சள் நீர் அபிஷேகம் நடைபெற்றது.</b><br></p><p>இந்து முன்னணி மாவட்ட செயலர் அருணாசலம் மஞ்சள் நீர் அபிஷேக&nbsp; பூஜையை ஆரம்பித்து வைத்தார்.&nbsp; சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணி மாநில செயலர் வழக்கறிஞர் குற்றாலநாதன்,&nbsp; இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேலன், இந்து இளைஞர் முன்னணி நெல்லை கோட்ட பொறுப்பாளர் பிரம்ம நாயகம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். விழாவை முன்னிட்டு பெண்கள், பெரியோர்கள், சிறுவர், சிறுமிகள்&nbsp; குடத்தில்&nbsp; மஞ்சள் நீர் எடுத்து&nbsp; ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள் நீர் அபிஷேகம் நடைபெற்றது. மஞ்சள் நீர் அபிஷேகத்தை&nbsp; முத்துலட்சுமி , இந்து அன்னையர் முன்னணி சாத்தான்குளம் ஒன்றிய செயலாளர் ராமகனி ஆகியோர்&nbsp; வழி நடத்தினர்.&nbsp;</p><p>இதில் மோடி நகர்&nbsp; இந்து அன்னையர் முன்னணி&nbsp; பொறுப்பாளர்கள் அமராவதி, அன்பு செல்வி, இந்து முன்னணி தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்தர், ஒன்றிய செயலாளர்கள் நாகராஜ், மாரிமுத்து&nbsp; உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>