இரு சக்கர வாகன விபத்தில் இளைஞர் உயிரிழப்பு!
நிருபர்
July 18, 2021
தூத்துக்குடியில் இரு சக்கர வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

தூத்துக்குடியில் இரு சக்கர வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

தூத்துக்குடி 3-செண்ட் அந்தோணியார்புரத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 24). எலக்ட்ரீசியனான இவர் சம்பவத்தன்று அமுதாநகர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது அங்கு உள்ள வேகத் தடையில், எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த விஜய் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.