விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் கூடுதல் பணியாளர்களை நியமிக்கவும், 30 ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கை வசதிகளை ஏற்படுத்தவும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆய்வின்போது, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாராயணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.