தவெக-வில் இணைந்த 'வாரிசு' பிரமுகர்: அதிர்ச்சியில் அதிமுக!
நிருபர்
February 21, 2026
2016 முதல் அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டசபை சபாநாயகராகப் பணியாற்றியவர் தனபால். அவரது மகனான லோகேஷ், நீண்ட காலமாக அதிமுகவில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார்.

2016 முதல் அதிமுக ஆட்சிக்காலத்தில் சபாநாயகராக இருந்தவர் தனபால். அவரது மகனான லோகேஷ், நீண்ட காலமாக அதிமுகவில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார்.

இந்தநிலையில், கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், அதிமுக சார்பில் நீலகிரி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்றார். எனினும், அந்தத் தேர்தலில் அவர் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியில் போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற அதிருப்தி இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகி, தவெகவில் இணைந்துள்ளார்.

அதிமுகவின் ஒரு மூத்த தலைவரின் மகன், புதிய கட்சியான தவெகவில் இணைந்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.