<p><b>சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையம் அருகில் தேமுதிக சார்பில் மின் கட்டண உயர்வு, நியாயவிலை கடைகளில் அத்தியாவசிய பொருள்கள் சில மாதங்களாக&nbsp; வழங்கப்படாது, தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்காத கர்நாடக மாநில அரசு உள்ளிட்ட விவகாரங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.&nbsp;</b><br></p><p>இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தூத்துக்குடி தெற்கு மாவட்டசெயலாளர் சதீஷ் தலைமை வகித்தார். சாத்தான்குளம் நகர செயலாளர் பேச்சிமுத்து,&nbsp; ஒன்றிய செயலாளர்கள்&nbsp; தன்ராஜ், லூக்காஸ் பிரேம்ராஜ், செல்வக்குமார் ஆகியோர் முன்ளிலை வகித்தனர். நகர பிரதிநிதி இசக்கிமுத்து வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.</p><p>இதில், மாவட்ட இணை தலைவர் சித்திரைராஜ், மாவட்ட துணை செயலாளர்&nbsp; ஆறுமுகம், மாவட்ட் செயற்குழு உறுப்பினர்கள் சுரேஷ், மாயாண்டி,&nbsp; பொதுக்குழு உறுப்பினர் சியாமளா வண்ணன், மாவட்ட மகளிரணி பேச்சியம்மாள், வாசுகி, மாவட்ட தொழிற் சங்கம் செல்வன், ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றிய செயலாளர் சாத்ராக், உடன்குடி நகர செயலாளர் காதர்&nbsp; முகைதீன், ஆழ்வார்திருநகரி நகர செயலாளர் குமரன், காயல்பட்டினம் நகர செயலாளர் நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நகர பொருளாளர் முத்துக்குமார் நன்றி கூறினார்.</p>