தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் மும்தாஜ் வேட்பு மனு தாக்கல்
நிருபர்
February 03, 2022
தூத்துக்குடி 38வது வார்டு
<p><b>தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் 38 வது வார்டில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் மும்தாஜ் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.</b></p><p>தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28ம்தேதி தொடங்கியது.</p><p>இந்த நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் என்பதால் வியாழக்கிழமையான இன்று காலை முதலே பலரும் ஆர்வமுடன் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.</p><p>இந்த நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் 38 வது வார்டில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் மும்தாஜ் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.</p>