<p><b>வீரசக்கதேவி&nbsp; ஆலயத் திருவிழாவை முன்னிட்டு வருகிற 10ஆம் தேதி 58 அரசு&nbsp; மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்களை மூட மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.&nbsp;</b></p><p><b style="color: rgb(57, 132, 198);">இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</b></p><p>தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம் பாஞ்சாலங்குறிச்சி கிராமம்&nbsp; வீரசக்கதேவி&nbsp; கோவில்&nbsp; திருவிழா 10.05.2024 மற்றும் 11.05.2024 ஆகிய இரண்டு நாட்கள்&nbsp; நடைபெறவுள்ளது&nbsp; தொடர்பாக&nbsp; 58 அரசு&nbsp; மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்களை நாளை 10.05.2024 ஒரு நாள்&nbsp; மட்டும்&nbsp; மூடுவதற்கு&nbsp; உத்தரவிடப்படுகிறது.</p><p>மேற்குறிப்பிட்ட தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி&nbsp; வைத்தல்&nbsp; போன்ற&nbsp; செயல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என&nbsp; மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி&nbsp; தெரிவித்துள்ளார்.</p>