<p><b>திருச்செந்தூர் திடீரென கடல் சுமார் 50 அடிக்கும் மேல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.</b></p><p>தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இது முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். இங்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கடலில் புனித நீராடிவிட்டு முருகனைத் தரிசித்து விட்டுச் செல்கின்றனர்.</p><p>இந்த நிலையில், திருச்செந்தூரில் இன்று திடீரென சுமார் 50 அடிக்கும் மேலாக கடல் உள்வாங்கியது. முருகன் கோயிலுக்கு வந்த பக்தர்கள் அனைவரும் கடல் உள்வாங்கிய காட்சியை தனது மொபைல் போனில் புகைப்படங்களை எடுத்துச் சென்றனர்.</p><p>கோயிலுக்கு வந்த பக்தர்கள் ஆபத்தை உணராமல் கடலில் ஆழமான பகுதிக்குச் சென்று குளித்து வந்தனர். இதையடுத்து, பக்தர்கள் கடலில் இறங்க வேண்டாம் என காவல்துறை எச்சரித்துள்ளது.</p>