தூத்துக்குடியில் அகற்றப்பட வேண்டிய நினைவுச் சின்னம் அது... இமக சீற்றம்!
நிருபர்
June 17, 2025
இந்திய விடுதலை போராட்ட வீரர் வாஞ்சிநாதன் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருஉருவத் படத்திற்கு இந்து மக்கள் கட்சியின் சார்பாக தூத்துக்குடியில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்திய விடுதலை போராட்ட வீரர் வாஞ்சிநாதன் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருஉருவத் படத்திற்கு இந்து மக்கள் கட்சியின் சார்பாக தூத்துக்குடியில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்து மக்கள் கட்சியின் சார்பாக மாநில அமைப்பு செயலாளர் செல்வசுந்தர் தலைமையில் மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் சிலை அருகில், இந்திய விடுதலை போராட்ட வீரர் வாஞ்சிநாதன் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருஉருவத் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் வசந்தகுமார் பூஜாரிகள் பேரவை நிர்வாகி சாஸ்தா, இராமசுப்பு, சுந்தர், பால்முருகன், ஆறுமுகம் மற்றும் இந்து மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தேச பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும், ஆங்கிலேய அரசின் ஏகாதிபத்திய கொடுங்கோலன் ஆஷ் நினைவகத்தை, தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருவது சுதந்திர போராட்டத்தையும், அதில் பங்கு பெற்று உயிர் நீத்தவர்களையும், பங்கு பெற்றவர்களையும் அவமதிக்கும் செயலாகும்.

தூத்துக்குடி பீச் ரோட்டில் அமைந்துள்ள ஆங்கிலேய கலெக்டர் ஆஷ் நினைவகத்தை அகற்றிட வேண்டும் என்று வாஞ்சிநாதன் நினைவு நாளில் இந்து மக்கள் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.