ஸ்ரீவைகுண்டம் அருகே தேக்கு மரங்களை வெட்டிய இருவர் கைது : வனத்துறையினர் நடவடிக்கை!
நிருபர்
July 31, 2024
ஸ்ரீவைகுண்டம் அருகே தேக்கு மரங்களை வெட்டிய இருவர் கைது : வனத்துறையினர் நடவடிக்கை!
<p><b>ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றுப்படுகையில் தேக்கு மரங்களை வெட்டிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.</b><br></p><p>தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வனச்சரகத்திற்கு உட்பட்ட தாமிரபரணி ஆற்றுப்படுகை பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கருங்குளம் ஆற்றுப்படுகை பகுதியில் சட்டவிரோதமாக தேக்கு மரங்கள் வெட்டியது தெரியவந்தது. </p><p>இதையடுத்து தேக்கு மரங்களை வெட்டிய பொன்னன் குறிச்சி பகுதியை சேர்ந்த இசக்கி மற்றும் மறுகால்தலை பகுதியை சேர்ந்த மாரியப்பன் ஆகிய இருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நீதித்துறையில் ஆஜர்படுத்தி இருவரையும் சிறையில் அடைத்தனர்.</p>