கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆய்வு!
நிருபர்
February 12, 2024
கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆய்வு!
<p><b>மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் இன்று (12.02.2024) கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.</b><br></p><p>மேலும் காவல் நிலைய போலீசாருக்கு அவர்கள் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்தும் காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கினார்.</p><p>இந்த ஆய்வின்போது பயிற்சி காவல் உதவி கண்காணிப்பாளர் வாக்கரே அக்ஷய் அணில், கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் மற்றும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.</p>