தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில்  முதலுதவி மையத்தை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.

உலக மீனவர்கள் தினத்தை முன்னிட்டு  தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில்  சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முதலுதவி மையத்தை திறந்து வைத்து, ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்ததுடன், மீனவர்கள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற தனித்திறன் போட்டிகளில் வென்ற குழந்தைகளுக்கு பரிசுகள் மற்றும் விசைப்படகு தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இவ்விழாவில் மாநகர திமுக செயலாளர்  ஆனந்தசேகரன், துணை மேயர்  ஜெனிட்டா செல்வராஜ், மாநில மீனவரணி துணை அமைப்பாளர் புளோரன்ஸ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர்  நிர்மல்ராஜ், மாநகர மீனவரணி அமைப்பாளர்  டேனியல், தொழிலதிபர்  பழரசம் விநாயகமூர்த்தி, முன்னாள் பேராசிரியை  பாத்திமா பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.