தூத்துக்குடி டூவிபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடைகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

தூத்துக்குடி டூவிபுரம் மாநகராட்சி  தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கும் இலவச சீருடை, பாடப்புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமை தாங்கினார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மாணவ - மாணவிகளுக்கு இலவச சீருடைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேச மூர்த்தி, திமுக மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.