மாடு வளர்ப்போர் மற்றும் விவசாயிகளுக்கு முக்கிய தேவையாக இருக்கிற மாட்டுச் சந்தையானது விளாத்திகுளத்தில் புதிதாக உதயமாகிறது.

மாட்டுச் சந்தை என்பது மாடுகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் ஒரு முக்கிய இடமாகும், இது விவசாய மற்றும் கால்நடைத் தொழிலுக்கு இன்றியமையாதது.  மாடு வளர்ப்போர் மற்றும் விவசாயிகளுக்கு மாட்டுச் சந்தைகள் ஒரு முக்கியமான பொருளாதார ஆதாரமாக அமைகின்றன.

ஆகவே, மாடு வளர்ப்போர் மற்றும் விவசாயிகளுக்கு முக்கிய தேவையாக இருக்கிற மாட்டுச் சந்தையானது விளாத்திகுளத்தில் உதயமாகும் செய்தி அவர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

விவசாயிகள், வியாபாரிகள், மாட்டு வண்டி பந்தய உரிமையாளர்கள், பந்தயம் முன் ன் சாரதி மற்றும் பின் சாரதி,  பந்தய ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் ஏற்ற மற்றும் விரும்ப தக்க வகையில், வருகின்ற 3.10.2025 வெள்ளிக்கிழமை முதல் தூத்துக்குடி  மாவட்டம், விளாத்திகுளத்தில் வேம்பார் சாலையில் M.R.R. என்ற புதிய வார மாட்டுச்சந்தை உதயமாகிறது. இந்த புதிய வார மாட்டுச் சந்தையானது வாரம் தோறும் வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு  நடைபெறுகிறது.