திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா - அலைமோதும் பக்கதர்கள் கூட்டம்
நிருபர்
January 28, 2021
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி தைப்பூசம் அலை அலையாக திரண்ட பக்தர்கள்

திருச்செந்தூரில் ”தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2 வது படை வீடு திருச்செந்தூர் சுப்பிரமணியர் இக்கோவிலில் வருடந் தோறும் முக்கிய திருவிழாக்கள் நடைபெறும்.

இதில் முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூச திருவிழா இத்திருவிழாவானது இன்று 28.01.2021 (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இன்று அதிகாலை 3மணிக்கு நடை திறந்து 3.40 மணிக்கு விஸ்வ ரூப தீபாராதனையும், 6மணி அளவில் உதயமார்தாண்ட அபிஷேகமும் நடந்தது.

8.30 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சியும், 10 மணிக்கு உச்சி கால அபிஷேகமும் நடக்க இருக்கிறது.

பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும்,அழகு குத்தியும், பாத யாத்திரையாகவும் வந்து சாமி தரிசனம் செய்தனர்.