தூத்துக்குடி மாநகரில் மழை வெள்ள பாதிப்பு நடவடிக்கை தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் கி.செந்தில்ராஜ் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தாமிரபரணி ஆற்றில் அதிகமாக மழை தண்ணீர் வந்தது மட்டும் இல்லாமல் தூத்துக்குடி நகர் பகுதியில் நேற்று முன்தினம் 108 மி.மீ மழை பதிவானது. நேற்று மட்டும் 40 மி.மீ மழை பதிவானது. ஆங்காங்கே மழை தண்ணீர் தேங்கியுள்ளது.

போர் கால அடிப்படையில் 170 இராட்ச பம்புகள் மூலம் தேங்கியுள்ள மழைநீர் வெளியேற்றம் செய்வதற்கு மாநகராட்சி மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. அதிகமாக பம்புகள் மூலம் மழைநீர் வெளியேற்றம் செய்வதற்கு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு 20 பம்புகளுக்கு ஒரு துணை ஆட்சியர் நிலையில் நியமித்து மாநகராட்சி பணியாளர்கள் மூலம் 24 மணி நேரம் மழைநீர் வெளியேற்றம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுமட்டுமில்லாமல் காலை முதலே மாவட்ட ஆட்சியர் ஆகிய நானும் சார் ஆட்சியர் நகர் பகுதியில் ஆய்வு செய்து வருகிறோம். பொங்கல் தினம் ஆரம்பித்தற்கு முன்னரே குடியிருப்போர் நலச்சங்கம் மற்றும் வடக்கிடக்கிழக்கு பருவமழை ஆரம்பபித்தற்கு முன்னரே பல்வேறு தரப்பினர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

கட்டுப்பாட்டு அறை வாட்சப் எண், தொலைபேசி எண் வாயிலாக பாதிப்புள்ள பகுதியினை  அறிந்து துரித நடவடிக்கை எடுத்துள்ளோம். அனைத்து நபர்களையும் ஊக்கவிக்கிறோம். நேற்றைய தினம் தாமிரபரணி ஆற்றில் உபரிநீர் 84 அயிரம் கனஅடி வெளியேற்றம் செய்யப்பட்டு இன்று 45 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.

நிவாரண முகாம் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் ஏரல் பகுதியில் 11 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 905 நபர்கள் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சுகாதாரத் துறையின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயத் துறையின்  மூலம் பயிர் சேதங்களை தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

தொடர்ந்து ரகுமத் நகரில் மழைநீரால் பாதிக்கப்பட்ட இடங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன்,  சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், மாநகராட்சி பொறியாளர் சேர்மகனி, உதவி பொறியாளர் சரவணன், உதவி ஆணையர் இராமச்சந்திரன், துணை ஆட்சியர்கள், உதவி செயற்பொறியாளர்கள், இளநிலை செயற்பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.